கர்ப்பத்தை அறிவித்த இலியானா! காதலர் யார்?

நடிகை இலியானா 2006 ஆம் ஆண்டு தேவதாஸ் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், கன்னட, இந்தி படங்களில் நடித்தார்.

தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய  புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ. நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் உள்ளிட்டோருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில்  தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிரட்டு உள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அறிவித்திருந்தார். அத்துடன் குழந்தையின் உடையின் புகைப்படம் மற்றும் தன் கழுத்தில் இருக்கும் செயின் டாலரில் அம்மா என்கிற வாசகம் இருப்பதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தார். இலியானாவின் இந்தப் பதிவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர், ஆனால் சிலர் முதலில் உங்கள் கணவர் யார் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுநாள் வரை தனது காதலர் யார் என்று கூறாமல் இருந்த இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். ஆனால் இணையவாசிகள் அந்த போட்டோவை பார்த்து “ஒருவேளை நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கோமோ, அல்லது திருமண மோதிரமாக இருக்கும் என்று குழப்பத்தில் கமெண்ட் செய்து வருகின்றது.

அதுமட்டுமின்றி அதில் தான் ‘பேபிமூனுக்காக’ சென்றுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை, இலியானா தனது ‘பேபிமூனில்’ இருப்பதை தனது ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு கடற்கரையில் இருந்து சன்னி கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது