இயக்குனரை ஸ்டுடியோவிலிருந்து விரட்டிய இளையராஜா!:

அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக கால் பதித்த இளையராஜா இன்றுவரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வருகிறார். இசையில் எப்படி மனதை உருக்குகிறாரோ.. அதே நேரம் கோபத்தில் அனைவரையும் பொசு்கி விடுவார்.

அந்த மாதிரி சம்பவம் இது..
தங்கர்பச்சான் இயக்கிய அழகி திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் பலரையும் நெகிழ வைத்தன.

அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்திற்கு ராஜா இசையமைத்தார். ஆனால், அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய 7 படங்களுக்கு ராஜா இசையமைக்கவில்லை.

இதற்குக் காரணம்..

ஒருமுறை இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ஷாட்ஸ் (டவுசர்) அணிந்து தங்கர்பச்சான் சென்றார். ஆத்திரமான ராஜா ‘என்ன உடை இது.. இந்த இடம் கோவில் மாதிரி.. இது போன்ற உடையணிந்து இங்கே வரக்கூடாது. வெளியே போ’ என அவரை விரட்டி விட்டார்.
அதன் பின்னரே இளையராஜாவிடம் தங்கர்பச்சான் செல்வது இல்லை.
சமீபத்தில் இந்த சம்பவத்தை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.