பிரபல இயக்குநர், நடிகர் ஆர். சுந்தர்ராஜன்,ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
“சத்தியராஜை வைத்து நான் இயக்கிய திரைப்படம் திருமதி பழனிச்சாமி. குழந்தைகளின் கல்வியை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கினேன். இப்படத்தில் சுகன்யா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியானது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ஆனால் முதலில் இவர் இசை அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த படத்தில் ‘ஆயிரம் கோவில்களை கட்டுவதை விடவும், ஒருவருக்கு உணவளிப்பதை விடவும் ஒருவரை படிக்க வைப்பதே சிறந்தது. அதுவே தர்மம்’ என கார்டு போட்டேன்.
இதைப் பார்த்த இளையராஜா, ‘கடவுள் இல்லாமல் என்ன நடக்கும்? இதை மாற்று. இல்லையேல் இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கமாட்டேன்’ என சொல்லிவிட்டார்.
அதன்பின், அதை மாற்றி வேறு மாதிரி எழுதிய பின்னரே அப்படத்தின் பிண்ணனி இசையை முடித்துக்கொடுத்தார” என்றார் சுந்தரராஜன்.
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்கிற பாரதியின் வார்த்தைகளையே மறுதலித்திருக்கிறாரே இளையராஜா.