பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ஹிட் ஆகின. ஆன்ல ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் இருந்து மற்ற இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “வைரமுத்துவிற்கு இளையராஜா பிரச்சனை, இளையராஜாவிற்கு வைரமுத்து பிரச்சனை” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாள் பிஸ்மி, ஒரு பேட்டியில் இது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
“கடலோரக் கவிதைகள்” திரைப்படத்தின் பாடல்கள் பதிவின்போது “பள்ளிக்கூடம் போகாமலே” என்ற பாடலை வைரமுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் அந்த பாடலை இளையராஜாவே எழுதிவிட்டார்.
வைரமுத்து இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு போனபோது, இளையராஜா அவரது உதவியாளரை கொண்டு வைரமுத்துவை திரும்ப வீட்டிற்கே அனுப்பிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாரதிராஜா, “வேதம் புதிது” திரைப்படத்தை இயக்கியபோது இளையராஜா, “வைரமுத்து பாட்டெழுதுவதாக இருந்தால் நான் இசையமைக்கமாட்டேன்” என கூறினார்.
அதனை தொடர்ந்துதான் பாரதிராஜா “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார்” இவ்வாறு பிஸ்மி கூறினார்.