பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், தமிழில் ‘ஈஸ்வரன்’, ‘கலக தலைவன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, பவன் கல்யாண்-க்கு ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போதைய ஒரு பேட்டியில் அவர், நான் ஒரு மாஸ் ஹீரோயின் ஆகவே ஆசைப்படுகிறேன். ஆனால், முத்த காட்சிகளில், நீச்சல் உடை அணிந்த காட்சிகளில், முகம் சுளிக்கும் வகையில் நடிக்க விரும்பவில்லை. என் பெற்றோர்களுடன் அமர்ந்து என் படம் பார்க்கும் வகையில் தான் படங்களை தேர்வு செய்கிறேன். ஒரு நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் இருந்தால், கவர்ச்சியின்றியும் வெற்றி பெற முடியும் என்றுள்ளார்.
தற்போது, பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜாசாப்’ என்ற பேய் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால், மேலும் பல படங்களில் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார்.