“மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், அமைச்சர் உதயநிதி நடித்த படம் ‘மாமன்னன்’ மேலும், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில்  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் , “இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக மாமன்னன் இருக்கும்” என்றார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டதால், இதுதான் என் கடைசி படம் என ஏற்கெனவே அறிவித்து விட்டேன். ஒருவேளை மீண்டும் நடிக்க வந்தால், மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பேன்” என்று பேசினார்.