தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது ‘பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியாவெங்கும் பிரபலமானுள்ளார்.

தனது விவாகரத்து, தசை அழற்சி நோய் பாதிப்பு, தந்தை மரணம் போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்ட பின்னர், சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். தற்போது, மீண்டும் நடிப்பில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

அண்மையில், ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். மேலும், இன்னொரு புதிய வெப் தொடருக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமந்தா, இனிமேல் நடிப்பில் இடைவெளி எடுக்க மாட்டேன். நடிப்புதான் என் முதல் காதல். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். இனி ஓய்வு எடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே பல இடைவெளிகள் எடுத்துவிட்டேன். இனி தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன். தற்போதைக்கு ‘ரகத் பிரம்மாண்டு’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதன் பிறகு, இன்னொரு புதிய படத்திலும் நடிக்க உள்ளேன். அதன் படப்பிடிப்பு இரண்டு மாதங்களில் தொடங்கும்” என்றார்.