ராம்குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தில் விஷ்ணு, நந்திதா,காளி வெங்கட், முனிஷ்காந்த் ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
சினிமாவில் 10 ஆண்டுகள் பயணித்தாலும் தன்னை வெளியில் காட்டியது முண்டாசுப்பட்டி என முனிஷ்காந்த் கூறியுள்ளார். இந்த படத்தை நண்பர்களுடன் பார்க்க சென்றேன். எனது காட்சி வரும்போது அத்தனை பேரும் ரசித்தார்கள். முதல் முறையாக என்னை நான் பெரிய தியேட்டரில் பார்க்கும் போது 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெகுமதி. ரசிகர்களின் கைத்தட்டல் பார்த்து அழுது விட்டேன் என்றார். பிரபல டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் முனிஷ்காந்த் வீடியோ கீழே…