“ஆபாசமாக எழுத மறுத்தேன்!”: ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலாசிரியர்  பேட்டி

பிரபல பாடலாசிரியர் விவேகா, தனது திரை அனுபவங்களை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

அவரது எழுத்தில் மிகப் பிரபலமான, ‘ஓ சொல்றியா மாமா..’ பாடல் உருவான வித்ததை பகிர்ந்துகொண்டார்.

“இந்த பாடல் இடம் பெற்ர புஷ்பா படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. இதில், ‘ஓ அண்ட்டாவா..’ என்ற பாடல் இருந்தது. இதில், ‘உயரமா இருந்தாலும் குள்ளமா இருந்தாலும் கவலைப்படாதே.. சிகப்பா இருந்தாலும் கருப்பா இருந்தாலும் கவலைப்படாதே..’  என்று தன்னம்பிக்கை வரிகள் இருந்தன.

இதை தமிழில், ஆண்களை கிண்டல் செய்யவது போன்று மாற்றி எழுதினேன்.  இயக்குநருக்குப் பிடித்துப்போக, தெலுங்கிலும் இப்படியே எழுதச் சொல்லிவிட்டார்கள்” என்றார்.

மேலும் அவர், “சமீபத்தில் ஒரு படத்துக்கு பாடல் எழுத அழைத்தார்கள். பல்லவி இரண்டு லைன் இயக்குநரே எழுதி இருந்தார். அதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து எழுதச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக போய்விட்டது. அந்த பல்லவி வரிகள் அத்தனை மோசமாக இருந்தன.  என் வாழ்நாளில் அந்த வரியை எழுதினேன் என சொல்ல முடியாது.

ஆகவே, ‘எத்தனை லட்சம் கொடுத்தாலும் இந்த வரிகளுக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்.. இந்த வரிகள் இடம் பெற்றால் எனது பெயரை போட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்” என்ற புதிய தகவலையும் விவேகா கூறினார்.

இது போன்ற பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..