இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கி வரும் ‘பிசாசு-2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகளில் நடித்திருப்பதாக பல மாதங்களாக செய்திகள் அடிபட்டு வந்தன.
இந்த நிலையில் திடீரென்று அந்த நிர்வாணக் காட்சிகளையெல்லாம் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் அறிவித்தார். இதனால் இந்தக் காட்சிக்காகவே இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் “அப்போ நீங்க மட்டும் பார்க்குறதுக்குத்தான் ஆண்ட்ரியாவுக்கு கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுத்து ஷூட் செஞ்சீங்களா…” என்று இயக்குநர் மிஷ்கினை நோக்கி சமூக வலைத்தளங்களில் கேள்விகள் பறந்தன.
இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் “அந்த நி்ர்வாணக் காட்சிகளை நான் பார்க்கவே இல்லை. டெலீட் செய்ய சொல்லிவிட்டேன்..” என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின் இது குறித்து அளித்த பேட்டியில், “இந்த பிசாசு-2 படத்தின் கதையை சொல்லி முடிச்சவுடனேயே “இதுல நிர்வாணக் காட்சியிருக்கா?”ன்னு ஆண்ட்ரியா கேட்டாங்க. “ஆமாம் இருக்கு”ன்னு சொன்னேன். “அப்படீன்னா வழக்கமான சம்பளத்தைவிட எனக்கு அதிகமான சம்பளம் வேணும்ன்”னு கேட்டாங்க. அதெல்லாம் நியாயமானதுதான்னு நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான போட்டோகிராபர் பிரெண்டான சுந்தரை வைச்சு ஆண்ட்ரியாவோட நியூட் போட்டோ ஷூட்டை செஞ்சோம். ஆண்ட்ரியா வீட்லேயே அந்த போட்டோ ஷூட் நடந்துச்சு. அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவரும், என்னுடைய பெண் உதவி இயக்குநர் ஈஸ்வரியும் மட்டுமே உடன் இருந்தாங்க.
அதுக்கப்புறம் எனக்கு அதையெல்லாம் அனுப்பட்டுமான்னு அவர் கேட்டப்போ.. நான், “இப்போ வேண்டாம்.. வெயிட் பண்ணு”ன்னு சொல்லிட்டு ஒரு பக்கம் யோசிச்சுக்கிட்டே இன்னொரு பக்கம் மற்ற வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.
அப்புறம் ஒரு நாள் நான் ஆண்ட்ரியாவைக் கூப்பிட்டு “நிர்வாணக் காட்சிகளை படத்துல வைக்கப் போறதில்லை. ஏன்னா இது ஒரு பெண்ணைப் பற்றிய படம். பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது. படத்துக்கு இந்த நிர்வாணக் காட்சிகளால் ஏ சான்றிதழ் கொடுத்துட்டாங்கன்னா குழந்தைங்க வந்து பார்க்க முடியாமல் போயிரும்”ன்னு சொன்னேன்.
அப்புறம் போட்டோகிராபர் சுந்தருக்கு போன் செஞ்சு “அந்த போட்டோக்களை டெலீட் செஞ்சிருங்க”ன்னு சொல்லிட்டேன். இதுதான் நடந்தது. நிர்வாணக் காட்சிகள் என்பது இந்தப் படத்தைப் பொருத்தவரை பேச்சு அளவிலேயே காணாமல் போய்விட்டது..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.