Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“ஆரம்பத்தில் எனக்கும் ‘மீ டூ’ தொல்லைகள் இருந்தன..” – சொல்கிறார் நடிகை அனுஷ்கா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் ஆரம்பித்த ‘மீ டூ’ பிரச்சினை அதன் பின்பு உலகமெங்கும் வெடித்து பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்திய சினிமாவிலும் பல பிரபலங்களின் முகத்திரையை இந்த ‘மீ டூ’ பிரச்சாரம் கிழித்தெறிந்தது.

தமிழ்ச் சினிமாவில் பெயர் சொல்லாமல் பலரும், அறியப்பட்ட சிலரும் இந்தக் குற்றச்சாட்டுக்களைச் சொல்லிப் பரபரப்பாக்கினார்கள்.

இத்தனை நாட்கள் கழித்து தென்னிந்தியாவின் புகழ் பெற்ற நடிகையான அனுஷ்காவும் இந்தக் குற்றச்சாட்டை இப்போது சொல்லியுள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் இருந்து வருகிறது. சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினைகள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அந்த தொல்லையை ஆரம்பக் கட்டத்தில் நானும் அனுபவித்தேன். ஆனால், நான் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அதற்கு பிறகு என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

திரையுலகில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், திரையுலகம் கவர்ச்சியானது என்பதால் அது வெளியே தெரிகிறது. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது அவளை நிர்ப்பந்தம் செய்வது தவறு…” என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News