பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள, லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இதே கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, யு டியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர், “பிரதீப் இந்த படத்தின் கதையைச் சொன்ன போதே, நிச்சயம் இது வெற்றி பெறும் என நம்பினேன். பெரிய பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெறும் என நினைப்பது தவறு. படங்களில் செலவை வைத்து பிரம்மாண்ட படம் என நினைப்பதை ஏற்க முடியாது. லவ் டுடே செலவு ரீதியாக சுமாரான பட்ஜெட் படம்தான். ஆனால், கதை என்கிற அளவில் பிரம்மாண்டமான படம்” என்றார்.
உண்மைதானே..!