விஷ்ணு விஷால் தயாரித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம், அவரது தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ‘இரண்டு வானம்’ மற்றும் ‘ஆர்யன்’ படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், விஷ்ணு விஷால் ‘கட்டா குஸ்தி 2’ மற்றும் ‘ராட்சசன் 2’ படங்களில் நடிக்கவுள்ளார் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில், விஷ்ணு விஷால் தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில், ‘நான்’, ‘காதல்’ ஆகிய படங்களில் நடிக்கவிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் நழுவின. ‘சென்னை 28′ படத்திற்காகவும் ஆடிஷனில் கலந்து கொண்டேன். சுமார் 7 வருடங்கள் சினிமாவில் போராடிய பின்னர் தான் எனக்கு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.