Thursday, April 11, 2024

“ரசிகர்களை நான் விரும்புவதில்லை..!”: மிஷ்கின்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரசிகர்கள்தான் எங்கள் உயிர் என  திரை நட்சத்திரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் இதிலிருந்து வேறுபட்டு, “ரசிகர்களை நான் விரும்புவதில்லை” என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

இது குறித்து அவர் பேசும்போது, “என்னிடம் பலர், ‘நான் உங்கள் ரசிகன்’ என்று சொல்லும்போது எனக்கு எரிச்சல்தான் வரும். யாரும் யாருக்கும் ரசிகர்களாக இருக்க வேண்டியதில்லை.

என் படத்தைப் பார்த்து ஒருவன் ஒரு விசயத்தைத் தெரிந்துகொண்டால் அதுதான் எனக்கு மன நிறைவு. அதனால் என் படத்தைப் பார்ப்பவர்கள் அட்மையர்-ஆக இருக்க வேண்டும். அதாவது புரிந்து ரசிப்பவர்களாக இருக்கவேண்டும். வெறும் ரசிகர்களை நான் விரும்புவதில்லை” என்று சொல்லி இருக்கிறார் மிஷ்கின்.

- Advertisement -

Read more

Local News