Saturday, September 21, 2024

“தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது” – ‘நாடு’ பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குநர் சரவணன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எங்கேயும் எப்போதும்’ படத்தில் இருந்து இயக்குநர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யாதான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன்.கதிரேசன் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குர் சரவணன் பேசும்போது, “இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக் கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லி மலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை. காரணம், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்புகூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைத்தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட், சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக் கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக் கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில்கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது..” என்று பாராட்டித் தள்ளினார்.

- Advertisement -

Read more

Local News