அமீர் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறைமையை கொண்டவர். பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சுப்ரமணியம் சிவா இயக்கிய யோகி படத்தில் முதன்மை கதாபாத்திரம், வடசென்னை படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டை பெற்றார் அமீர். சமீபத்தில் பிரபல யூடியூப் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்த அமீர் யோகி படம் எனக்கு திருப்தியை கொடுக்க வில்லை. சிவா அவர்களுக்காக நடித்தேன் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.