மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவதுதலைவர்கள் என்பது மக்களோடு ஒருபோல் நிற்பவர்கள். மக்களுக்காக போராடுபவர்கள். மக்களுக்கு தேவையான விடுதலையை எடுத்து கொடுப்பவர்கள். அந்த வகையில் நமக்கு அந்த தலைவர்களைப் பற்றி தெரியாமலே இருக்கிறது. ஆனால் அதுபோலவே ஆயிரக்கணக்கான தலைவர்கள் நம் இடையேவே உள்ளனர்.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒரு பிரச்சனையில் மக்களுக்கு முன்னிலை வகிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த தலைமுறையைக் கட்டி உருவாக்குகிறார்கள். அந்த அடுத்த தலைமுறையும், எதிர்காலத்தில் பிரச்சனை ஏதும் வந்தால், அதற்காக முன்னால் நின்று கேள்வி கேட்கத் தயங்க மாட்டார்கள்.
நான் சினிமாவில் மாணவராக இருந்த காலத்தில், இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவராக இருக்கிறேன். எந்த சமூக அமைப்பும் மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைக்கப்படவில்லை என்றால், ஒரு கட்டத்தில் அந்த அமைப்பு மக்களுக்கு எதிராக செயல்படும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன்.இது போன்ற புரிதல்கள் எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டவை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.