சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகை திரிஷா, நான் சினிமா உலகில் இருப்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்று. நடிகையாக வெற்றிபெற்றிருந்தாலும், குடும்பத்திற்குள் ஒரு பெண்ணாக இருப்பதால் என்னை அதிகமாக கவனித்து பார்த்துக்கொள்வார்கள்.நான் யாரையும் பயன்படுத்தியதில்லை, யாருக்கும் துரோகம் செய்யவும் இல்லை. இன்று யாராவது என்னை துரோகம் செய்தால் கோபம் வரும். ஆனால் என் அம்மா, ‘இதுதான் உலகம், அதனால் ரிலாக்ஸாக இரு’ என்று சொல்லி சமாதானப்படுத்துவார்.

சினிமா உலகம் பல நேரங்களில் நம்மை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கிறது. நான் ஏராளமான எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அவை நம்மை கீழே தள்ள முயலும். ஆனால் அவையெல்லாம் என்னை மேலும் உறுதியானவளாக மாற்றி இருக்கின்றன.என்னுடைய திருமணம் ரத்து ஆனது பெரிய செய்தியாக பேசப்பட்டது. அது சில நேரங்களில் எனக்கு மனவருத்தம் அளித்தது. பலரும் என்னைப் பற்றிய கதைகளை பேசிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையை புரிந்துகொள்வதற்காக முயற்சி செய்யவில்லை.

என்னுடைய திருமணம் ரத்து ஆனதே உண்மை. ஆனால் அந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும். பொய்யான கதைகளை பரப்புவது ஆரோக்கியமான செயலல்ல.என்னை பற்றிய ஊகக்கதைகள் மீது எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் தனிப்பட்ட விஷயங்களை மதித்து, அதிலிருந்து விலகி செல்லலாம். என் குடும்பத்தினர் – அம்மா, அப்பா, பாட்டி – எல்லோரும் இப்படியெல்லாம் பேசுவதை கேட்டு மனம் விட்டு சிரிப்பார்கள்” என்று திரிஷா தெரிவித்தார்.