Tuesday, August 13, 2024

ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன்  நான் .! நடிகர் மகேஷ்பாபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டி சீரிஸ், முராத் கெடானியின் சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம் டிச.1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிமல் பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மகேஷ்பாபு, எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மகேஷ் பாபு, “நான் ஒருமுறை ரன்பீர் கபூரை சந்திக்கும்போதே இதைச் சொன்னேன். அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டாரா என்பது தெரியாது. இப்போதும் இந்த மேடையில் சொல்கிறேன். நான் ரன்பீர் கபூரின் தீவிரமான ரசிகன். இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என புகழ்ந்தார். இதையடுத்து பேசிய நடிகர் ரன்பீர் கபூர், ‘ஜெய் பாபு’ என கோஷமிட்டார். பின்னர், “நான் சந்தித்த முதல் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. ‘ஒக்கடு’ படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் நன்றி கூறி ரிப்ளை செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்து எங்கள் படத்துக்கு ஆதரவளித்ததற்கு நன்றி என தெரிவித்தார் .

 

- Advertisement -

Read more

Local News