Friday, April 12, 2024

சாதாரண குமரேசன் நடிகர் நெப்போலியனாக மாறியது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் நெப்போலியனின் இயற்பெயர் ‘குமரசேன்’ என்பது தற்போதைய சினிமா ரசிகர்களுக்குத் தெரியாத ஒன்று.

அவருடைய இயற் பெயர் எப்படி சினிமாவில் ‘நெப்போலியனாக’ மாறியது என்ற சுவாரசியமான விஷயத்தை அவரே சொல்கிறார்.

“நான் அறிமுகமான ‘புது நெல்லு புது நாத்து’ படத்துல வில்லன் கேரக்டர்ல வயசான ஆளா நடிச்சேன். ஆனால் அப்போ எனக்கு வயசு வெறும் 27தான். ஆனாலும் நடிப்பு மீது எனக்கிருந்த ஆர்வத்தால் நான் நடித்தேன்.

நடித்து முடித்து படம் வெளியாக இருக்கும்போது என் குருநாதர் பாரதிராஜா என்னைக் கூப்பிட்டு “உனக்கு வேற பேர் வைக்கலாம்ன்னு இருக்கேன். நீயே ஒரு பத்து பேரை எழுதிட்டு வா.. அதில இருந்து நான் ஒரு பேரை செலக்ட் செய்றேன்…” என்றார்.

நானும் எனக்குப் பிடிச்ச பத்து பெயர்களை எழுதிட்டு்ப் போய் அவர்கிட்ட கொடுத்தேன். எதுவுமே அவருக்குப் பிடிக்கலை. “உன் உருவத்துக்கும், உசரத்துக்கும் பொருத்தமா இருக்கணும்ய்யா.. அப்படியொரு பேரா வைக்கணும்.. சரி.. நானே யோசிக்கிறேன்…” என்றார்.

திடீர்ன்னு பட ரிலீஸுக்கு 2 நாள் முன்னாடி திரும்பவும் ஆபீஸுக்கு வரச் சொன்னார். நான் போனவுடனேயே “உனக்கு ‘நெப்போலியன்’னு பேர் வைக்கிறேன்”னார் பாரதிராஜா. ஏதோ மதுபான பிராண்ட் மாதிரி இருக்கேன்னு பீல் செஞ்சேன். ஆனால், பாரதிராஜா இதில் உறுதியாக இருந்தார். நானும் நமக்கு ஒரு கெத்தா.. நம்ம உருவத்துக்குத் தகுந்தாப்புல இருக்கேன்னு விட்டுட்டேன்.

அன்னிக்கு ஆரம்பிச்சு தென்னிந்திய மொழிகள்ல எல்லாத்துலேயும் படம் பண்ணிட்டேன். கடைசியா இப்போ ஹாலிவுட்லகூட 4 படத்துல நடிச்சிட்டேன். இது எனக்குப் பெருமைதானே…?!” என்றார்.

- Advertisement -

Read more

Local News