கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்த புதிதில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார். கவர்ச்சியாக நடிக்கவும் மறுத்தார். நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தபிறகு அவரது குடும்ப பாங்கான இமேஜ் மேலும் உயர்ந்தது. தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களே வந்தன.

கவர்ச்சிக்கு மறுத்ததால் இளம் முன்னணி கதாநாயகர்கள் அவரை ஜோடியாக்க தயங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படங்கள் குறைந்தன. இந்நிலையில், தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படங்கள், வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் மூலம் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயார் என்பதை அவர் சூசகமாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.