ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்குகளின் சரணாலயத்தில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர், அவதார் போன்ற பிரமாண்டமான படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தான் வெளியிடுகிறார். அவர் தற்போது இயக்கியுள்ள அவதார் 3ம் பாகத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு இந்தியா வருகிறார். அந்த சமயத்தில் ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தின் தலைப்பு, போஸ்டரை வெளியிடுவார் என்கிறார்கள்.
மேலும், இந்த படத்திற்கு ‘ ஜென் 63’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.