குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால்பதித்து பிறகு ஹீரோயின் ஆகி, கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம்,இந்தி,பல மொழி படங்களில் கதாநாயகியாக உச்சத்தில் இருந்தவர்.
1995ம் ஆண்டு இந்தி பட அதிபரான போனிகபூரை திருமணம் செய்து பாலிவுட் மருமகளாக மாறிவிட்டார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை தமிழில் தொடங்கி இந்தியில் முடிந்துவிட்டது. ஆனால் தமிழில் ஒரு முக்கியமான விசயம் செய்துள்ளார்.
அது..
1976ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில்’’மூன்று முடிச்சு’ படத்திலும் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் ’16 வயதினிலே’ படத்திலும் நாயகியாக நடித்தார்.
இந்த படங்களிலும் உச்ச நடிகர் ரஜினி, உலக நாயகன் கமல் ஆகியோர்
இணைந்து நடித்திருப்பார்கள். இப்படி இருபடங்களில் முக்கிய நாயகர்களுடன் நடித்த பெருமை ஸ்ரீதேவிக்குத் தான் உண்டு.