நிஜ ரேஸ் வீரர்களுடன் நடித்த ஹீரோ!  

கார்த்திக் ஜெயாஸ்  –  சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் சதீஷ் (எ) சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் அகில் சந்தோஷ்-  லாவண்யா  ஜோடியாக நடிக்கும் படம், ரேசர்.  ர். ஆறுபாலா, ‘திரௌபதி’ சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் ஹீரோ நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கித் தர முடியவில்லை. ஆனாலும், ஹீரோ தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் மெல்லிய காதல் கதையும் இழையோடுகிறது.

இந்த படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது.   தவிர இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு உள்ளது.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.