பழம்பெரும் நடிகை ஹேமா மாலினி, தன்னை புறக்கணித்த இயக்குநர் குறித்து, ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
“ஒரு காலத்தில், சென்னையில் பல கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய நடிகைகளைத் தேடுவார்கள். அப்படித்தான் நடன நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் என்னை நீக்கவிட்டார்.
அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், நான் உழைக்க வேண்டிய உந்துதலைக் கொடுத்தது.
அதன்பிறகு, 1968-ம் ஆண்டு பாலிவுட்டில் சப்னோ கா சவுதாகர் திரைப்படம் மூலம் அறிமுகமானேன். பிரபல நடிகை ஆனேன். இதைத் தொடர்ந்து, 1973-ம் ஆண்டு ‘கெஹ்ரி சால்’ திரைப்படத்தில் ஸ்ரீதருடன் பணிபுரிந்தேன்” என ஹேமமாலினி கூறியிருக்கிறார்.