தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில், பொங்கல் பண்டியையை ஒட்டி வெளியாக உள்ளது துணிவு திரைப்படம்.
ஏற்கெனவே அஜீத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய வெற்றித் திரைப்படங்களில் இயக்கிய ஹெச்.வினோத்தின் இயக்கம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
ஏற்கெனவே துணிவு துறை படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் வெளியாகி ஹிட் ஆனது. இந்நிலையில், துணிவு படத்தின் அடுத்த பாடலாக காசேதான் கடவுளடா எனும் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இப்பாடலும் வெளியான ஐந்து மணி நேரத்தில் 22 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.