அவருக்கு சினிமா தெரியாது…ரஜினி பற்றி சுஹாசினி சொன்ன ரகசியம்…!

அவருக்கு சினிமா தெரியாது…ரஜினி பற்றி சுஹாசினி சொன்ன ரகசியம்…!

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டதில் சுஹாசினி இருந்தார். கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த விழாவில் நடிகை சுஹாசினி மணிரத்னம் கே.பாலச்சந்தர் அவர்களுடனான சினிமா பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வங்கியில் வேலை பார்த்து வந்தேன் இது தான் தனது வாழ்க்கை என்று நினைத்து கொண்டு இருந்தேன். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகுதான் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்போது தான் ‘சிந்துபைரவி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் ஆனவருக்கு ஒரு காதலி. கதையில் காதலி கதாபாத்திரம் சரியாக வருமா என்று முதலில் யோசித்தேன் பிறகு ஒத்து கொண்டு நடித்தேன். அந்த படத்தில் வரும் காட்சிகளை அற்புதமாக காட்டியிருப்பார். நடிகையாக சினிமாவில் எனக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தவர் பாலசந்தர்.

கமல், ரஜினி நடித்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடந்து கொண்டிருந்தது. அப்போது ரஜினி படப்பிடிப்பு இடைவேளையில் யாரிடமும் அதிகம் பேச மாட்டார். பயந்த சுபாவம், தனிமையில் சிகரெட் பிடித்துக் கொண்டே இருப்பார்.

உதவி இயக்குனர் வந்து ரஜினியிடம் கதையின் காட்சியை கூறி விளக்கினால் ‘மேலே பார்’ என்றால் ’கிழே பார்பார்’ இப்படி சினிமா பற்றி எதுவும் தெரியாமல் வந்தவர் ரஜினி. அவரை இன்று சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்க காரணமானவர் கே.பாலசந்தர்.

சினிமா பற்றி எதுவும் தெரியாமல் வரும் புதுமுகங்களுக்கு ஒரு பாடசாலையாக இருந்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சுஹாசினி.