எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தில் இயக்குனர்கள் லோகேஷ் கனராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோர் ரிப்போர்ட்டர்களாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் , அதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.