Touring Talkies
100% Cinema

Sunday, June 29, 2025

Touring Talkies

புதிய காதலில் விழுந்தாரா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மா? உலாவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வந்தனர். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்–2’ திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து, அதிலும் குறிப்பாக செம்ம கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகளில் நடித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இவர்களின் திருமணம் கோவாவில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமன்னா தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது அதிக வேலையாகும். ஆனால் விஜய் வர்மாவுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இல்லாத நிலை காரணமாக, இது அவருக்கு ஈகோ பிரச்சனையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. தமன்னாவிடம் படங்களை குறைத்து, தன்னுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும், இதுவே இவர்கள் இருவரின் பிரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், விஜய் வர்மா தற்போது ‘தங்கல்’ படத்தில் நடித்த பாத்திமா சனாக்கானுடன் காதலிக்கிறாரா என்பது குறித்து பேசப்படுகிறது. இவர்கள் இருவரும் மனிஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான ‘உல் ஜலூல் இஷ்க்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் ஜோடியாகச் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை பொருட்படுத்தாமல் தமன்னா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பாத்திமா சனாக்கான் முன்னதாக நடிகர் அமீர் கானை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News