“அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி!

திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

தவிர அதன் பிறகும்கூட, அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்கு வரலாம்.

கமல் கூட அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை.

விஜய் தொடரந்து நடிக்கணும்.. கமல்சாரே அரசியலில் தீவிரமா இருந்தபோது படங்களில் நடிக்கவில்லை. அரசியலைவிட்டு  விலகி நிற்கும்போதுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். இப்போ அரசியலில்  கான்சர்டேட் பண்ணாம தொழிலில் ஈடுபடுகிறார்.

அது போல விஜயும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. திரையுலக தொழிலுக்கும் நல்லது” என்று தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பேட்டிளை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..