Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘பார்ட்னர்’ படத்தில் காமெடி ரோல்: ஹன்சிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம், ‘பார்ட்னர்’. பாலக் லால்வாணி, யோகி பாபு, பாண்டியராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் சார்பில் கோலி சூரியபிரகாஷ் தயாரித்துள்ளார்.

படம் பற்றி ஹன்சிகா கூறியதாவது:

‘பார்ட்னர்’ படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போது உற்சாகமடைந்தேன். இதில் வித்தியாசமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பெண்ணாக இருந்தாலும் மனதளவில் ஆணாக நடிக்கும் கேரக்டர். அதாவது யோகிபாபுவாக நடிக்கிறேன். இதில், மதுகுடிக்கும் காட்சியில் நடிப்பது கடினமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்.

சினிமாவில் 20 வருடத்தைத் தொட்டிருக்கிறேன். இந்த திரைப்பயணத்தில் அதிக பொறுமையை கற்றுள்ளேன். என் லட்சியங்களை அடைய கடுமையாக உழைப்பதையும் அறிந்திருக்கிறேன். அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டிருக்கிறேன்”என்றார் ஹன்சிகா.

.

- Advertisement -

Read more

Local News