Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

ஹன்ஸிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் இருக்கும் நடிகை ஹன்ஸிகா மோத்வானி அடுத்ததாக ஒரு முக்கியமான, சாதனைப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

105 மினிட்ஸ்’ என்ற அந்தத் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கப்படவுள்ளது. அந்த ஒரே ஒரே கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஸிகா மோத்வானியே நடிக்கிறாராம்.

சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ராஜா துஷ்ஷா இயக்குகிறார்.

ஒரேயொரு கதாபாத்திரத்தின் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இப்படம் படைக்கவுள்ளது.

நடிகை ஹன்ஸிகா மோத்வானி இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “தெலுங்கு திரையுலகில், முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி.

இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறியபோது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை  தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபர  திரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது.

மேலும் ஒரு சிறப்பு என்னவெனில் படத்தின் தலைப்பான 105 மினிட்ஸ்’தான். படத்தின் நீளம் 105 நிமிடங்கள் கொண்டது, படத்தின் உண்மையான நேரமும் படத்தின் கதை நேரமும் ஒன்றுதான்.

ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இளம் பெண்ணை பற்றியதுதான் இந்தப் படத்தின் கதை. இதை தவிர தற்போதைக்கு கதை குறித்த ரகசியங்களை கூற முடியாது. ஆனால்,  மேலும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது. மே 3-ம் தேதி படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்…” என்றார்.

பொம்மக் சிவா இப்படத்தினை தயாரிக்கிறார். படத்தின்  தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

- Advertisement -

Read more

Local News