Tuesday, September 24, 2024

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்… எந்த மாதிரி பாடல் தெரியுமா? #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் “அமரன்”. உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியாக இவர் நடித்துள்ளார். “அமரன்” திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துவிட்டார்.

படத்தின் முதல் பாடல் குறித்து தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது ஒரு காதல் பாடல் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இப்பாடல் ஹேய் மின்னலே என்று படக்குழுவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News