Thursday, April 11, 2024

‘காட்பாதர்’ தெலுங்கு படம் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள தெலுங்கு படம் ‘காட்பாதர்’.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்குதான் இந்த ‘காட்பாதர்’ படம்.

சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் 4 நாட்களில் 100 கோடியைத் தாண்டிவிட்டது.

ஆந்திரா, தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் வரும் அக்டோபர் 14-ம் தேதி தமிழகத்திலும் இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் டப்பிங்கும் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும்விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது, இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது..

- Advertisement -

Read more

Local News