ரஜினியை மையமாக வைத்து, சூப்பர் ஸ்டார் டைட்டில் பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அவர் நடிக்கும் ஜெயிலர் படத்தில், ‘நான்தான் சூப்பர்ஸ்டார்.. வேறு யாரும் போட்டிக்கு வந்தால் மண்டையில் இடி விழும்’ என்ற அர்த்தத்தில் பாடல் இடம் பெற்றது. மேலும் அப்படத்தின் ஆடியோ விழாவில், ரஜினி கூறிய காக்கா கதை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஜினையை மையமாக வைத்து இன்னொரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் அவரை தலைவர் என அழைப்பது வழக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கெளதம் மேனன் “ தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவிற்காகவே எல்லாரும் கதை எழுதுகிறார்கள்” என்று ஆதங்கமாக கூறினார்.
அப்போது நெறியாளர், “படமும் அப்படித்தானா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சில நொடிகள் மௌனமாக இருந்த கௌதம் மேனன் ‘தலைவர்ணா யாரு’ என்று கேலியாக கேட்டார்.
இப்போது அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதையடுத்து மீண்டும் ஒரு சர்ச்சை ஆரம்பித்து இருக்கிறது.