Friday, April 12, 2024

1990-களின் பின்னணியில் உருவாகும் ‘கணேசாபுரம்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.காசிமாயன்  தயாரித்துள்ள திரைப்படம் ‘கணேசாபுரம்’.

இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச்  சேர்ந்த  ரிஷா  ஹரிதாஸூம் நடித்துள்ளனர். இவர்களுடன்  இணைந்து  சரவண  சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்-டாக் ராஜ்பிரியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வாசு, இசை – ராஜா சாய், அறிமுக இயக்குநரான கே.வீராங்கன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கே.வீராங்கன் பேசும்போது, “மதுரை மண்ணை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 1990-களின் காலகட்டத்தில் நடைபெறுவதைப்போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான  கதைக் களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம்.

இதில் நாயகன் சின்னா மற்றும் நாயகி ரிஷா ஹரிதாஸ் புதுமுகங்களை போல் இல்லாமல் தங்கள் கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி மிகவும் எதார்த்தமாக நடித்து உள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வாசு தனது கேமராவின் மூலம் ரசிகர்களை 1990-களின் காலகட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறோம். அதேபோல் இசையமைப்பாளர் ராஜாசாயும் தனது இசையின் மூலம் இக்கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார்…” என்றார். 

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்தை ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது..

- Advertisement -

Read more

Local News