ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாலிவுட்டில் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படமே உருவாகி உள்ளது. தமிழில் முதன் முறையாக ஒரு இசை ஆல்பம் உருவாகி உள்ளது. ‘வல்ல தேசம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி உள்ளார்.
