Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘ஃபிங்கர் டிப்’ வெப் சீரிஸின் 2-ம் பாகம் ‘ஜீ-5’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Zee-5 ஓடிடி தளத்தில் வெளியான ‘ஃபிங்கர் டிப் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனையும் தயாரித்துள்ளனர்.

Film Crew Productions சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C.வில்லியம்ஸ் ஆகியோர் இந்த ஃபிங்கர் டிப்’ சீசன்-2 தொடரை தயாரித்துள்ளனர்.

இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரசன்னாவின் ஒளிப்பதிவு, தீனதயாளனின் இசை, மற்றும் G.K.பிரசன்னாவின் பட தொகுப்பில் இந்த தொடர் உருவாகியுள்ளது. இயக்குநர் ஷிவாவகர் ஸ்ரீனிவாசன் இந்த ‘ஃபிங்கர் டிப்’ இரண்டாவது சீசனை இயக்கியுள்ளார்.

இந்த ‘ஃபிங்கர் டிப்’ இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். இத்தொடரின் கதை ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. சிலர் வேட்டையாடுபவர்கள் மற்றும் சிலர் டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி,  நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் இருக்கும் முக்கியமான ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொடர் ஒரு பக்க சார்பான கருத்துடன் மட்டும் நிற்காமல், தொழில் நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும், அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும். மற்ற தொழில் துறை அல்லது புதுமையான கண்டுபிடிப்புகளைப் போலவே, ‘டிஜிட்டல் தளம்’ என்பது தனி நபர்களின் கருத்துகளின் அடிப்படையில் எண்ணற்ற வரையறைகளைக் கொண்டுள்ளது என்பதை இந்த தொடர் சொல்கிறது.

இந்த இரண்டாவது சீசன் வரும் ஜூன் 17 முதல் ஜீ-5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.

- Advertisement -

Read more

Local News