Friday, September 20, 2024

‘தளபதி 67’ படத்தின் பூஜை வீடியோவை வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வாரிசு’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதமே துவங்கி விட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போதுதான் வெளியானது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு, தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளது.

இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. பூஜையில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.

திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News