Wednesday, April 10, 2024

ஃபைட் கிளப் – திரை விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநர்  நிறுவனம் வழங்க, முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது“ஃபைட் கிளப்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அபாஸ் அ.ரஹ்மத்.

உறியடி விஜய்குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர்தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

2004ல் தொடங்கும் கதைக்களத்தில் வடசென்னை பாக்ஸிங் மூலம் தன் அடையாளத்தை பெற போராடுகிறார் பெஞ்சமின். அவரின் உழைப்பு நிராகரிக்கப்பட, அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டை சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.

அதில் ஒருவனாக செல்வா அவனுக்காக பெஞ்சமின் பணத்தை கட்டி கால்பந்து அகாடமியில் சேர்ப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிலையில் பெஞ்சமினின் தம்பி ஜோசப், கஞ்சா விற்கும் கிருபாவுடன் கூட்டணி சேர்ந்து தவறான வழியில் செல்கிறார். தம்பியை அழைத்து கண்டிக்கிறார்.கிருபாவை அடித்து விடுகிறார் பெஞ்சமின் அதனால் ஆத்திரமடையும் கிருபா தம்பியை தூண்டிவிட்டு இரவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.

ஜோசபை போலீஸில் சரணடைய சொல்கிறார்  ஒரு வாரத்தில் வெளியில் எடுப்பதாக வாக்குறுதியும் கொடுக்கிறார் கிருபா. ஆனால் மறந்து அரசியல் கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாக உருவெடுக்கிறார். 2016ல் கதைக்களம் மாறுகிறது பெஞ்சமின் இறந்ததால் கால்பந்து விளையாட்டில் முன்னேற முடியாமல் இருக்கும் செல்வா போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

இந்த சூழ்நிலையில் ஜெயிலிருந்து வெளியே வரும் ஜோசப் பலிவாங்க துடிக்கிறார். இதற்கு செல்வாவையும், அவனது நண்பர்களையும்  பயன்படுத்திக் கொள்கிறார். இறுதியில் ஜோசப்பின் திட்டம் பலித்ததா? கிருபாவை வழி வாங்கினாரா? செல்வா ஜோசப்பின் சதியை கண்டுபிடித்து விலகிக் கொண்டாரா? இறுதியில் தன் குரு பெஞ்சமினையும், தன் சொந்த தம்பியையும் கொன்றவர்களை செல்வா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

செல்வாவாக விஜயகுமார் வட சென்னை இளைஞனாக கதாபாத்திரமகாவே மாறிவிட்டார். அடி தடி சண்டைக்காட்சிகள், துரத்தல்கள், இடையே கொஞ்சம் காதல் என்று படம் முழுவதும்  கோபக்கார இளைஞனாக குருவின் சாவிற்கு பழி வாங்கும் காட்சியில் மிரள வைத்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன், ஜோசப்பாக அவினாஷ் கதாப்பாத்திரத்துடன் கட்சிதமாக பொருந்துகிறார்.

கிருபாவாக சங்கர் தாஸ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, மற்றும் பலர் வடசென்னை பாணி புதுமுகங்களின் அணிவகுப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கோவிந்த் வசந்தாவின் இசை கதையுடன் கலந்து விடுகிறது. சிபங்களிப்பை சிறப்பாகவும், பழைய பாடலையும் இணைந்து நன்றாக  கொடுத்துள்ளார்.

மற்றும் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு விறுவிறு ஒட்டத்துடன் சண்டைக்காட்சிகள் கோமராவுக்குள் கட்சிதமாக பொருத்திவிட்டார். பல காட்சிக் கோணங்களால் அசத்தியிருக்கிறார்.

சசி எழுதிய வடசென்னை கதைக்களத்தில் அங்கு நடக்கும் பிரச்சனைகளை கண்முன் காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர்  அபாஸ் அ.ரஹ்மத்.

ஆக்ஷன் பிரியர்களை பரவசப்படுத்தும் வடசென்னை விருந்தாக அமைந்துள்ளது  ஃபைட் கிளப்.

- Advertisement -

Read more

Local News