Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

இந்திய நடிகர்களில் முதன் முதலாக ராம் சரண் பெற்ற கவுரவம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபு ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் தனித்துவமான ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தெலுங்கு நடிகர் ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார்.

ஆம்..  சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.

இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண், தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடை அணிந்திருந்தார். இதையடுத்து ‘சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்’களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது தனி சிறப்பு.

இந்த ஆடையை,  உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுவினர், ‘ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன்’ பாணியில் வடிவமைத்து இருந்தனர்.

தற்போது ராம்சரணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News