2023-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த ‘பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டன்கி’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. இதன்மூலம், பாலிவுட்டில் தனது நிலையை மிகவும் வலுப்படுத்தினார்.

தற்போது, ரசிகர்கள் அனைவரும் அவரது அடுத்த படம் ‘கிங்’ மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஓடிடி நிகழ்ச்சிகள் மற்றும் ‘மகாராஜ்’ போன்ற படங்களில் சிறப்பாக நடித்த நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத், சமீபத்திய ஒரு நேர்காணலில் ‘கிங்’ படத்தில் தான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதைக் உறுதிப்படுத்தியுள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த ‘கிங்’ படம், ஆக்ஷன் திரில்லர் வகையிலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.