பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்திரி, நடிப்புக்கு பெயர் போனவர். நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி விட்டார்.
அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து, குறித்து பிரபல தயாரிப்பு நிர்வாகியான ஏஎல்எஸ் வீரய்யா தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“அந்த காலகட்டத்தில், சென்னை துறைமுகத்துக்கு கடற்படை கப்பல் ஒன்று வந்தது. அதில் அரசு விழா ஒன்று ஏற்பாடு செயயப்பட்டு இருந்தது. சாவித்திரி உள்ளிட்ட பல நடிகர்கள் அதில் கலந்துகொள்ள இருந்தனர்.
நான் சாவித்திரி வீட்டுக்குச் சென்றபோது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்கத்தில் இருந்தார். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. வீட்டு வேலைக்கார பெண்ணிடம் சொல்லி, சாவித்திரியை குளிக்கவைத்தேன். அப்படியும் மது போதை தெளியவில்லை. ஒரு வழியாக காரில் ஏற்றி துறைமுகத்துக்கு அழைத்து வந்துவிட்டேன்.

ஆனால் கப்பலில் சாவித்திரியால் ஏறமுடியவில்லை. பிறகு எனது தோளில் சாவித்திரியை தூக்கிக்கொண்டு கப்பலின் படிகளில் ஏறினேன். விழா அரங்கத்துக்கு அழைத்துச் சென்றேன். அப்போதுதான் ஒரளவு நிலைமையை புரிந்துகொண்டார் சாவித்திரி. பிறகு, இயல்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்” என்றார் ஏஎல்எஸ் வீரய்யா.