Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘த்ரிஷ்யம்-3’ படம் துவங்குகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘த்ரிஷ்யம்-3’ படம் உருவாக்கப்படும் என்று அதன் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து இதே படம் தமிழ், கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்தப் படத்திலும் இருந்ததால், இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இதன் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

தற்போது இந்த ’த்ரிஷ்யம்’ படத்தின் 3-வது பாகத்தைத் தொடங்கவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கூறியுள்ளார். கேரளாவில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டபோது அவர் இதைத் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்றிலிருந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், ’கிளாசிக் கிரிமினல் இஸ் பேக்’ என்று கூறி ’த்ரிஷ்யம் 3’ ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News