“கவலையே படக்கூடாது!” : நடிகை ரக்க்ஷிதா

டி.வி. நடிகை ரக்க்ஷிதா அளித்த பேட்டியில், “மனிதர்களுக்குத் தேவையான ஒரே விசயம், தன்னம்பிக்கைதான். வாழ்க்கையில் எது நடந்தாலும் கவலையே படக்கூடாது. நான் அப்படித்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளரமாட்டேன். ஒரு முறை எனக்கு வாய்ப்புகள் குறைந்த நிலை.. உடல் நலமும் சரியில்லை.. பொருளாதாரமும் பெரிய அளவில் இல்லை. நான்கு பக்கமும் பிரச்சினைகள். வேறு யாராக இருந்தாலும் நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால் முதலில் உடல் நலத்தை தேற்றினேன்.  பிறகு வாய்ப்புகளுக்காக முயன்று பெற்றேன்.  அடுத்து பொருளாதார பிரச்சினையும் தீர்ந்தது.

இப்படி மன தைரியத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார், தன்னம்பிக்கை புன்னகையுடன்.