Touring Talkies
100% Cinema

Friday, October 10, 2025

Touring Talkies

என் பெயரை சொல்லாதீர்கள்… கடவுள் பெயரை சொல்லுங்கள்… ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரம் தனது சில நண்பர்களுடன் ரிஷிகேஷ் பயணமாக விமானத்தில் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு அவர் சென்றதும், ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில்  மலையின் மீது அமைந்துள்ள ‘கர்ண பிரயாக்’ என்ற புனித இடத்திற்குச் சென்றார். புராணங்களின்படி, அங்கேயே  கர்ணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த இடம் ‘கர்ண பிரயாக்’ என்று அழைக்கப்படுகிறது. அங்கே ரஜினி தங்கி தியானம் செய்தார்.

பின்னர் அவர் பத்ரிநாத் கோவிலுக்குச் சென்றபோது, போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தார். அங்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து ரஜினி சாபு… ரஜினி சாபு… என்று வடமாநில பாணியில் அன்பாக அழைத்தனர். இதனால் நெகிழ்ந்த ரஜினி, என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா… நாராயணா…என சுவாமி நாமம் சொல்லுங்கள் என்று அன்போடு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News