Touring Talkies
100% Cinema

Wednesday, November 19, 2025

Touring Talkies

ஏஐ தவறாக பயன்படுத்தி அனைவரையும் கஷ்டப்படுத்தாதீர்கள் – நடிகை கிரிஜா ஓஹ் வேதனை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மராத்திய நடிகையான கிரிஜா ஓஹ், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலின் மூலம் திடீரென வைரலானார். அந்த நேர்காணலில் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் புடவையும் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஒரே வாரத்தில் ‘புதிய நேஷனல் க்ரஷ்’ என்று ஜென் Z இளைஞர்கள் அவரை கொண்டாடினர். அட்லி இயக்கிய ‘ஜவான்’ படத்திலும் நடித்துள்ள அவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மூலம் கிடைக்காத அளவிலான பிரபலத்தைக், ஒரே ஒரு நேர்காணலே அவருக்கு கொடுத்துவிட்டது.

இந்நிலையில், சிலர் அவரது புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் கிரிஜா ஓக், நாம் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்று எனக்குத் தெரியும். யாராவது டிரெண்டானால் இதுபோன்ற போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவது வழக்கமே. மக்கள் அதைக் கிளிக் செய்யும் வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

என்னை மிகவும் பாதிப்பது என்னவென்றால்… இதற்கு எல்லை இல்லை. எனக்கு 12 வயது மகன் இருக்கிறான். அவன் இப்போது சமூக வலைதளத்தில் இல்லை. ஆனால் வருங்காலத்தில் பயன்படுத்துவான். இன்று பிரசாரம் செய்யப்படும் இந்த போலி புகைப்படங்கள் அப்போது கூட இருந்துக்கொண்டே இருக்கும்.

ஒரு அம்மாவின் புகைப்படங்களை அவன் ஒருநாள் பார்ப்பான். அது போலியானது என்பதை அவன் தெரிந்துகொள்வான். இருந்தாலும் இதுபோன்ற கேவலமான செய்கைகள் பயமுறுத்துகின்றன. இதை நான் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மௌனமாகவும் இருக்க முடியவில்லை. ஏஐ-யைப் பயன்படுத்தி இப்படி செய்பவர்கள் ஒரு முறை, இரண்டு முறை சிந்தியுங்கள். உங்கள் சிரிப்புக்காக நாங்கள் பாதிக்கப்படுகிறோம். திடீர் புகழ் வருவது நல்லதுதான்… ஆனால், தயவுசெய்து என்னை மோசமாக சித்தரிக்காதீர்கள் என்று உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News