நாடக நடிகராக இருந்து நகைச்சுவை குணச்சித்திர வேடம் என தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் குமரி முத்து. அவரது சிப்பு அவருக்கான அடையாளமாக பார்க்கப்பட்டது. உதிரிப்பூக்கள்’, ‘நண்டு’ போன்ற படங்கள் குமரிமுத்துவை திறமையான நடிகராக சினிமா ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது.
இயக்குனர் மகேந்திரனுடன் தொடந்து ஒன்பது படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். நகைச்சுவை நடிகராவும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு மாதிரி தோற்றத்துடன் காணப்படும் குமரிமுத்து. உண்மையில் அவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் இருந்தார். புரனாநூறு முதல் திருக்குறள் வரை அனைத்தையும் கரைத்துக் குடித்தவர். நூல் பற்றி அவ்வளவு அற்புதமாக விளக்கவுரையுடன் கூற கூடியவராகவும் இருந்திருக்கிறார் குமரி முத்து.
உண்மை தான் ஆள் பாக்க ஒரு மாதிரி தான் இருப்பார் ஆனால் எத்தனை தமிழ் சார்ந்த புத்தகங்களை படித்திருப்பார். அவருக்குள் இருக்கும் இலக்கியவாதி ஆச்சரியம் தான். அதனால் தான் கூறினார்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர் என்று.