சினிமாவில் நடிப்பதை விட முன்னணி திரை பிரபலங்களுக்கு விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம். பல இந்தி நடிகர், நடிகைகள் பிசினஸிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானத்தில் திரைத்துறையினர் அதிகமான வரி கட்டி வருகின்றனர். அக்ஷய்குமார், ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல நடிகர்கள் அதிகமான தொகையை வரியாக கட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிக வருமான வரி கட்டும் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். 2016-17ம் ஆண்டில் இருந்து இவர், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வரி கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.‘ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை அவர் சம்பளம் வாங்குகிறார்; அதோடு விளம்பரங்களின் மூலம் அதிகம் சம்பாதிக்கிறர். இவரது ஆண்டு வருமானம் ரூ.40 கோடி; சொத்து மதிப்பு ரூ.500 கோடி’ என்றெல்லாம் கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்தபடியாக அதிக வரி செலுத்தும் நடிகை ஆலியா பட். இவர் ரூ.6 கோடி வரை வரி செலுத்துகிறார்.