தமிழ் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர் முத்துராமன். சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்தாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னை முன்நிறுத்திக் கொள்ளதா சிறந்த நடிகர் ,மாறாத இளமை,நாகரிகாமான மனிதராக, நடிகைகளிடம் ஜெண்டில்மென் என்று பெயர் எடுத்தவர்.
காதலிக்க நேரமில்லை,நெஞ்சில் ஓரு ஆலையம், முத்துராமனுக்கு பெயரை வாங்கி கொடுத்த படங்களாகும். ஆனால் அவரது துரதிஷ்டம் சினிமா வாழ்வில் இருந்தும் இந்த உலகத்தை விட்டும் 53 வயதில் உயிரிழந்தார்.
யாரும் எதிர்பார்க்காத இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலுக்கு வந்த பிறகு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு தனக்கு பிடித்த நடிகர் முத்துராமன் என்று பதிலளித்தார்.